2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்
இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத...




