Author: senan

புதைக்கும் அரசியல்

கொழும்புச் ‘சர்வதேச’த் தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று பெயரளவில் அறிவிக்கப்பட்டாலும் உலகெங்கும் இருக்கும் பல தமிழ் எழுத்தாளர் மத்தியில் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஏராளமான...

“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” -வல்லினம் நேர்காணல்

“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” (மிக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய சேனனுடன் ஒரு நேர்காணல்) http://www.vallinam.com.my/issue24/interview3.html சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘அம்மா’, ‘எக்ஸில்’ ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர்....

ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும்

பிரான்சில் 6 வருடங்களுக்கு முன்னரே பாடசாலைகளில் மத அடையாளங்கள் அணிந்திருக்கக் கூடாது என்ற சட்டம் போடப்பட்டது. அது ஏனைய மதத்தவர்களையும் உள்ளடங்கியதாக இருந்த போதும் குறிப்பாக முஸ்லிம்களைக் குறியாகக் கொண்டிருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.இஸ்லாமிய எழுச்சி பற்றிய பயமே அதைத் தொடர்ந்து தற்போது ஹிஜாப் அணியத் தடை போட்டுள்ளது. -பர்தா...

வியாபாரிகளின் காலம்-2

  யுத்தத்திற்கு முன் யுத்தத்திற்குப் பின் 2009 மே மாதத்தில் கொடூரமாக நடத்தி முடிக்கப்பட்ட யுத்தத்தைச் சும்மா ‘யுத்தம்’ என்று சொல்லி விட்டுவிட முடியாது. கொலைவெறி அரசால் நடத்தி முடிக்கப்பட்ட மாபெரும் படுகொலைச் சம்பவமது. யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் முள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் இராணுவம் 30...

வியாபாரிகளின் காலம்-1

    விசர்த்தனமான கிறுக்கல்களில் ஈடுபடச் சொட்டு நேரமும் இல்லை என்றிருக்க முற்பட்டால் நண்பர்கள் விடுகிறபாடாயில்லை. ‘சுயவிமர்சனம் செய்’ என்று பாரிசில் இருந்து சிலர் கொக்கரிக்கின்றனர். ‘உமது பழைய வரலாறு எமக்குத் தெரியும் ’ என்று சிலர் இங்கிலாந்தில் மர்மக்கதைகள் பேசித் திரிகின்றனர். அமெரிக்கக் கண்டத்திலிருந்தும் கூட...

பசுக்கு கயோட்டியும் நிகோனி பாவும்

கவட்டுக்குள்ள கைய வைச்சுக் கொண்டு ஆ , ஊ என்று கத்தும் ‘இசை’ கேட்டுப் புளித்து, இசையின் பக்கம் ‘மூக்கு’வைச்சுப் படுக்க மனமற்றுக் கிடப்பதே பழக்கம். இருப்பினும், இடைக்கிடை நினா சிமோன், பசுக்கு கயோட்டி முதலானவர்கள் வந்து ஆட்டிப் படைத்துப் போவார்கள். பசுக்கு கயோட்டி இங்கிலாந்து வந்து...

நேபாளம்- புரட்சிக்கான சூழலும் போதாமைகளும்

குறிப்பு  நேபாள மக்கள் எழுச்சி புரட்சிகர சமூக மாற்றம் நோக்கி நகர முடியாமலிருப்பதற்கான காரணமென்ன என்பது பற்றி நிகழும் உரையாடலின் தொடர்ச்சியாக தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பின் (Committee for workers international) சார்பில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவமிது. (இக்கட்டுரையின் சற்றே விரிவான ஆங்கில வடிவத்தை படிக்க...

இங்கிலாந்தின் உயர்வர்க்க யுத்தப்பிரகடனம் -பட்ஜட் 2010

‘இதை நீ எழுதியது எனது கம்பனியிலிருந்து, அதனால் இது என்னுடையது, வை கையெழுத்து’ என்று ‘அவன்’ பொல்லாங்கட்டையைக் காட்டி மிரட்டியது ஞாபகத்துக்கு வருகிறது. ‘அட மடையா இதைபோல் எத்தனை மென்பொருளை என்னால் எழுத முடியும் தெரியுமா? சும்மா கேட்டிருந்தாலே தந்திருப்பேனே எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?’ என்று சொல்லியும்...

இலங்கைப் பொதுத்தேர்தல் 2010

http://www.lumpini.in/a_punaivu-001.html   முப்பது வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் சனநாயகம் பூத்துக் குலுங்குவதற்கான எடுத்துக்காட்டாக, ஆளும் வர்க்க ஊடகங்கள் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற 14வது நாடாளுமன்றத் தேர்தலைச் சுட்டிக் காட்டுகின்றன. 7680 வேட்பாளர்கள், நாடு தழுவிய தேர்தல் என்று புளுகித்தள்ளுகிறார்கள். புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் இனி எப்படிச் சனநாயகம்...