வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ‘சோசலிசத் தமிழீழத்துக்கான’ கோரிக்கையும்-1
பகுதி 1 அண்மையில் வெளிநாடுகளில் நிகழ்த்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் (வ.தீ) சார்பான கருத்துக் கணிப்பீட்டில் வாக்களித்தவர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் இத்தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களித்துள்ளார்கள். இந்தக் கருத்துக் கணிப்பீட்டை ஒழுங்குபடுத்தியவர்கள், இது 1976ம் ஆண்டு வட்டுகோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இக்கணிப்பீடு நிகழ்த்தப்படுவதாகத் தெரிவித்திருந்தாலும், இதுபற்றிய தெளிவான கலந்துரையாடல் மக்கள்...




