அடங்கா கவிஞன் -ஆரன் அட்டபேக்
“அதிகாரத்தின் அறைக்கதவை தட்டித் திறப்பதற்காக வோல்காவில் பிறந்து அல்மாட்டியில் வளர்ந்தேன்” எனக் கவி பாடும் ஆரன் அட்டபேக் (யுசழn யுவயடிநம) அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய கவிஞன். எதிர்பிலக்கியம் செய்பவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கும் அதிகூடிய பரிசான கடுங்காவல் சிறைத்தண்டனையை அனுபவித்து வருபன் இந்த கசகிஸ்தான் கவிஞன்....




