பொய்யிலே பிறந்து பொய்யிலே உருளும் பிளேயர்
இந்தக் கதை ஒரு பகற்கொள்ளைக்காரனின் கதை. பச்சைக் கொலைகள் செய்து பணம் திரட்டியவனின் கதை. கேட்போரின் உயிரணுவின் ஒவ்வொரு துண்டும் துகளும் துடித்துச் சீறிச் சினக்கும் கதை. கோபம் கொப்பளித்துக் கொதித்து உங்களை உருக்கிவிடும் என்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு மேலே படியுங்கள். சர்வாதிகாரிகளும் மக்கள் நல விரோதிகளும்...




