கவர்ச்சி அரசியலைக் கவிழ்க்கப் பயமேன்?
2008ல் எழுதியது 1. அரசியற் குறியீட்டின் அரசியல் ஜெ.ஜென்னியின் ‘உள்ளாடை அரசியல்’ கட்டுரை தொடர்பாக மேலும் சில விசயங்கள் பேசவேண்டியுள்ளன. ஆதலின் இக்கட்டுரையை ஜெ.ஜென்னியின் கட்டுரையின் தொடர்ச்சியாகப் படிக்கவும். உடை அரசியல் உலகெங்கும் பெண்களுக்கு எதிரான அரசியலாக இருந்து வருகிறது. இதில் தமிழ்ப் பெண்கள் கவனத்துக்கு கொண்டுவரும்...




