உணர்வுகள் மேல் நக்கல்
நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது.
கீழ் படிந்திருக்கும் கருமேகத்தின் முனைகளை மேலும் கருக்கிப், பின்னிருந்து தங்கத் தகட்டாக எழும் உன் ஒளியில் கிறங்கி கிடக்கும் உலகின், இமை நிமிரா – வல்லாரைக் கீரை உண்டெழும் ஆசிய ஆங்கிலேயனின் வலை விழா – வரட்டும் கவர்ச்சி எனப் பறைந்து கிறங்கங்கட்டும் பாசமற்ற உலகு.
உயிர் வறட்டும் மெல்லிய கால்கள்- தோள்கள் மேல் முத்தமிடக் கிறங்கும் முனகல் -எக்கவலையுமின்றி தொடர் என்ற ஊக்கம். வாடி வதங்கிய உணர்வுகள் மேல் நக்கல். மென்மையாக உருண்டு பரவும் ஏக்கம் – கசக்கிப் பிழியும் பொழுதெழும் தொணிஉயர் தாக்கம், கேள்வி, குரல், சுருக்கம். மற்றும் வதை.
காமித்துக் காமித்துக் களைத்தோம் மேகமே. கலைந்து குலைந்து காட்டுகிறாய் வித்தை.
நீ அதை நம்பச் சாத்தியமேயில்லாது நடந்ததால் எழுதுவாம். எழுதோமாயின் ஏக்கம் சாவா.
அதே உருக்கலும் கிறக்கலுமாய் – அதே ஆரம்பத்தின் ஏக்கமும் தவிரமுமாய் -அதே நெருடலும் ஏக்கமுமாய் – அதே பறப்பும் இருப்புமாய் – அதே வாக்குறுதிகளும் வார்த்தைகளுமாய் -அதே விடாயும் வில்லங்கமுமாய் – அதே இரகசியத்துடன் – யாரும் அறியா கனவுக்குள் காத்திருக்கிறேன்.
விசைகொண்டிழுத்து புரக்கேறும் சூட்டு ரத்தம் சுண்டிச் சுண்டி இழுக்காதே. அடங்காதென்றுதெரிந்தும் உயிரைப் புடுங்காதே.
விண்ணப்பம் இதுதான். வராட்டியும் சரி. வுறட்டியெடுத்தலும் சரி – உண் உணர்தல் வடிய வழியிருப்பதால் எனது பிறமொழியே. ஆனாலும் ஒரு கணம் தா. நீ நினைத்திராத நிஐமடய அதை ஒதுக்கு. உணக்கேனதில் நட்டம். ஒரு பொந்தில் அது எரியட்டும். ஓரு குஞ்சுக்கும் தெரியா தழல் வீரத்தில் மறயட்டும். மயக்கம் இல்லை என்ற சொல் மடியட்டும்.
நினைப்பு பின்தங்கிய வாலாற்றிற்கு திரும்பாமற் கடவது.
அனுபவி.
அதில் என் சுயத்துக்கும் ஒரு பங்கு நலமுண்டு.