உருக்கித்தான்
உருக்கித்தான்
உன்னிருந்து ஓர் கவிதை உருவுதலாகிறது.
அன்பு எல்லாக் காலத்தும் மொழி பிறள்வதில்லை
இருத்தலும் அழிவதில்லை.
வற்றிய கிடங்கேன் மேலும் முற்றுது ?
கனத்துப் பேரவா புறக்கணித்து மூளை நரம்புகள் சிலிர்க்கா.
தாளமின்றி இசைகள் தன் கைகளில் தவிடு பொடியகட்டும் – அப்படித்தான் அறும் என்றும் –பிசாசுகளின் விஷமம் என்றும் –யுகங்கள் கழிவது தவறற்ற சுதந்திரம்.
சுவாசிப்பதில் காமம் தோன்றும். – அவ்விருத்தல் வெறும் விடுதலை முதல் வாதம். எந்த நளினத்துக்கும் வாலாயப்படாதது.
குறைந்த வெளி-நேரத்தில் வாழ்வது.
காற்றும் காற்றுக்குள் வெளியும் குடித்துக் கனக்கும் பாசம்.
விடுதலை சொற்கள் கொண்டது. சொற்கள் பாசம் கொண்டது.
விடுவி.
யாராயினும்.
யாசனையல்ல.
அவா.