எனக்கும் சுதந்திர பந்தாவுக்கான கனவு
2010
கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –-
தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம்.
நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு
‘பலசோலி’ பற்றி
நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி
என் தணல் உயிரற்றுப்போனது.
மனதை குடிக்கும் மென்மை கண்டு நரம்புகூசி உயிர் நார்நாராய் கழன்று தசையறுக்கும் வலிபறத்தும். நோ நனைந்த நரம்புகள் உச்சியிருந்து ஊறி மாயஜால வதை செய்யும்.
இறந்த உலகை ஏன் அவாவுhன்? உறுதியோடு இறப்பை செருகு என்று மனம் அடிக்கடி கதைக்கும். அழி அழி அழி என்று வந்துபோகும் வதந்தி உணர்வுகள் முழுப்பலம் செருகி விடுவி, பல்கடித்து குத்தி நிம்மதிக்காய் நிமிர் என்றும் பேசும்.
தானாய் உதிரும் உணரும் தேவையின் தயவில் மிதக்கும் மனிதருக்கும் வாழ்தல் கசியும்.
இதற்குள் அதற்கொரு அகில கரிசனை!!!!- என்னே கேவலம்.
அவன் கத்துவான்-
சுதந்திரமாம்.
விடுதலை விடுதலை விடுதலை
வெட்டுருத்தும் கயவருக்கும் விடுதலை
சீ தூ நாயே.
பின்பவன்
படி தடவி பல்லுடைத்து –
வெறியில் படுக்கை தடவும்
பிசாசுக்கேன் பாசம்
அது வெறும் சொறிக்கதையும் சோறும் தின்னும்
2
படி தடவி பல்லுடைத்து வாழுதல் என்று பந்தா விட்டு வாழ்கிறான் அவன்.
அவன் கதை கேட்டு என் காதில் புகைவந்தது-
என் சுவர் கவிழ்த்த சுதந்திரம் என்ற எடுப்பை கேழ்விக்குட்படுத்தியது நியாயமே.
அப்படியொன்றும் இல்லை.
நேரம் பார்தது சுயம்சார்ந்து கருத்து தாவும் துச்சமான வாழ்வுதானா- தோற்றவளே நான். என் செய்ய?
வாழ்தலில் அலுத்துபோனேன் – காதலிலும் கண்டறியா சமூக இருத்தலிலும்கூட – இது உண்மை என்று அடித்துகூறும் தற்கால உணர்வுகளை மூளை சந்தேகிக்கும். கேழ்விகளில் குறுகி மீள்வதேயில்லை மடமூளை.
எவருக்காகவும் என்னிடம் எதுவுமில்லை. மலைமலையாய் குவிஞ்ச மிதப்பில் அள்ளி அள்ளி குடுக்க முடியுமென்ற கனவில் முன்பு முண்டியடித்தது நினைத்து மனம் இளிப்பும் பளிப்பும் செய்கிறது.
தன்னிலை புலம்பல்கள் சோர்வுதருவன. நானறியும் என் பற்றிய புள்ளிகள் சொற்பமே.
ஆக்கினைக்கும் அந்தர வாழ்வுக்கும் இடைவேளை சில கிடைக்கும். அதில் தாவி பற்றமுதல் பறந்தொழியும்.
இதுதவிர இல்லை.